மயிலாடுதுறை, அக்.19 - மயிலாடுதுறை மாவட்டம் திருக் கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற வந்த பெண்ணுக்கு தவறான சிகிச் சையளித்ததால் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் உறவினர் கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்க டையூர் அருகேயுள்ள பிள்ளைபெரு மாநல்லூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் சந்திரசேகர். இவரது மனைவி ஜெயந்திக்கு (50) புதனன்று காலை திடீரென மயக்கம் ஏற்பட்டதால், திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்துள் ளார். மருத்துவர் பணியில் இல்லாததால், சாதாரண ஊழியர் ஒருவர் சிகிச்சை அளித்துள்ளார். பிறகு மீண்டும் மயக்க மடைந்த ஜெயந்திக்கு, செவிலியர் ஒரு வரும் சிகிச்சை அளித்துள்ளார். ஆனா லும் ஜெயந்தியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், சிகிச்சை பலனின்றி அவர் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே உயிரி ழந்து உள்ளார். சாதாரண மயக்கத்திற்கு சிகிச்சைப் பெற வந்த ஜெயந்திக்கு தவறான சிகிச்சை அளித்ததாலேயே இறந்து விட்டார் என்று கூறி உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. சிம்சன், மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் சுந்தரவடிவேல் மற்றும் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர் கள், பொதுமக்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் கூறுகையில், “திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பி டி.மணல்மேடு, பிள்ளைபெரு மாநல்லூர், வளையகன்சோழகன், நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவ லூர், இரவணியன்கோட்டகம், கண்ணங் குடி, கிள்ளியூர், சரபோஜிராஜபுரம், சீதைசிந்தாமணி, அபிஷேகக்கட்டளை, பிச்சைகட்டளை, காலக்கட்டளை, தாழம்பேட்டை, வேப்பஞ்சேரி, குருவி குளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமபுறப் பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய பொதுமக்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த மருத்துவ மனையோ இன்று வரை ஆரம்ப சுகா தார நிலையமாகவே உள்ளது. இங்குள்ள உலகப் புகழ்பெற்ற அமீர்தக டேஸ்வரர் கோவிலுக்கு தினமும், ஆயிரக் கணக்கானோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்ற னர். கோவிலுக்கு வருபவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால்கூட, இந்த சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து கொள்வதே பெரும் சவாலாக உள்ளது. போதிய மருத்துவர்கள் இல்லை, பணியில் உள்ளவர்களும் முறையாக வருவதில்லை, சாதாரண சிகிச் சைக்குக்கூட, சுமார் 21 கி.மீட்டர் தொலைவில் உள்ள மயிலாடு துறைக்கே திருப்பி அனுப்பி விடப்படும் நிலை நீடிக்கிறது. இந்த ஆரம்ப சுகா தார நிலையத்தை மேம்படுத்தி 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டுமென பலமுறை போராட்டங் கள் நடத்தியும் எந்தவித பலனும் இல்லை. இந்நிலையில்தான், தவறான சிகிச்சையளித்ததால் ஜெயந்தி என்ப வர் உயிரிழந்திருக்கிறார் என குற்றம் சாட்டினார். மேலும், உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி, உயிரிழந்த ஜெயந்தி குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும். உடனடி யாக மருத்துவமனையை தரம் உயர்த்து வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார். பல மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டத்தையடுத்து சுகா தாரத் துறையினர், காவல்துறை, வட்டாட் சியர் புனிதா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.