திருவண்ணாமலை, ஏப். 8- ஊரக வளர்ச்சித்துறை யில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர் பணி யிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர எஸ்.ரமேஷ், பொதுச் செயலா ளர் ச.பாரி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மானிய கோரிக்கையில், மேற்பார்வையாளர் பணியிடங்கள் அனைத்தை யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் மூலமாக நிரப்பப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்பை வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்கள் அனைவரின் பணி வரன் முறை, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பணிபுரிந்து வரும் வட்டார மாவட்ட ஒருங்கிணைப் ்பாளர்க ளுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான தனி ஊழியர்கள் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மற்ற அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள் மற்றும் பதி வறை எழுத்தர்கள் பணியிட ங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை மக்கள் தொகையின் அடிப் படையில் பிரித்து புதிய ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக் கைகள் நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படாதது வளர்ச்சித்துறை ஊழியர்க ளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல் படுத்துவதற்காக மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் திட்ட மேலாண்மை அலகுகள் வெளிசந்தை முறையில் செயல்படுத்தப் படும் என்பது அரசுத் துறையில் ஊழியர்களை கொத்தடிமைகளாக்கும் நடைமுறையாகும். இத்தகைய நடை முறைகளை கைவிட்டு பிரதம் மந்திரி ஊரக குடியி ருப்பு திட்டத்தை தமிழ் நாட்டில் சிறந்த முறையில் செயல்படுத்துவதற்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் பெறும் பணியிடங்களை ஏற்படுத்தி போதுமான அளவு ஊழியர்களை நிய மிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.