districts

img

திருவண்ணாமலையில் இன்று கலைஞர் சிலை திறப்பு

திருவண்ணாமலை, ஜூலை 7- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்று பயணமாக ஜூலை 7 வெள்ளிக்கிழமை திரு வண்ணாமலைக்கு வருகை தருகிறார். அவருக்கு  திரு வண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.  பின்னர் ஆராஞ்சு கிராம பள்ளியில் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  நடை பெறும் கலைஞர்சிலை திறப்பு விழாவிலும், அதனைத்தொடர்ந்து அரசு விழாவிலும் கலந்து கொள்கிறார்.  இதற்காக திருவண்ணா மலை-திருக்கோவிலூர் சாலையிலுள்ள மைதானத்தி லும், ஈசான்ய மைதானத்தி லும் விழா மேடை அமைக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வந்தது. இந்த பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவண்ணாமலை - வேலூர் சாலையில் கலை ஞர் சிலை வைக்கப்பட்டு உள்ள இடத்தையும், அண்ணா நுழைவு வாயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ், முதலமைச்சரின் உள்வட்ட பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ. ஜோதி, மாவட்ட வரு வாய் அலுவலர் பிரிய தர்ஷினி, செய்யாறு கூட்டு றவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ். தரணி வேந்தன், அரசு அலு வலர்கள் உடனிருந்தனர்.