திருவண்ணாமலை,செப். 2- பெரணமல்லூர் அருகே பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைகளை தனிநபர் சிலர் ஆக்கிரமித்துள்ளதை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், வசிப்பதற்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக கடந்த ஆண்டில் 11 குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீட்டு மனை வழங்கியது. அந்த இடம் மேடும், பள்ளமாக இருந்தது. இதனால், பழங்குடி மக்களால் உடனடி யாக வீடு கட்ட முடிய வில்லை. பள்ளமாக உள்ள பகுதியை, மண் கொட்டி மேடாக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த இடம் மண் கொட்டி மேடாக்கப்பட்டது. அந்த இடம் மேடானதும் தனி நபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். போராடிப் பெற்ற வீட்டு மனைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அளந்து கொடுக்க வலியுறுத்தி, வந்த வாசி வட்டாட்சியரிடம் முறை யிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப் பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வந்தவாசி வட்டாட்சியர் அலுவ லகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளி யன்று (செப். 2) ஈடுபட்ட னர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஓரிரு நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை அளந்து அந்த பழங்குடி மக்க ளுக்கு வழங்குவதாக உறுதி யளித்தார். பிறகு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கட்சியின் ஒன்றியச் செய லாளர் பெரணமல்லூர் சேகரன் தலைமை தாங்கினார். வந்தவாசி வட்டாரச் செயலாளர் அப்துல் காதர், கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பெ.அரிதாசு, விவசாயிகள் சங்க மூத்த தலைவர் ந.ராதாகிருஷ்ணன், இடைக்குழு உறுப்பினர்கள் இரா.ராஜசேகரன், பி.கே.முருகன், ந.பிரபாகரன், கிளைச் செயலாளர் ஏ.கதிரவன், செந்தொண்டர் புண்ணியக்கோட்டி அஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.