திருவண்ணாமலை, ஜூன் 1- திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா விற்பனை செய்தததில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாகவும், அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண்மை இணை இயக்குநர் முருகன் செவ்வாயன்று (மே 31) பணி ஓய்வு பெற்றார். அதற்கான பணிநிறைவு பாராட்டு விழா வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு செல்வதாற்காக இணை இயக்குநர் முருகன் அலுவலகத்திலிருந்து காரில் வெளியேறினார். அப்போது விவசாயிகள் அவரது காரை முற்றுகையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் எந்த பதிலும் கூறாமல் சென்று விட்டார். இதில், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், பலராமன் அழகேசன், ஒன்றிய நிர்வாகிகள் லட்சுமணன், பழனி, ரஜினி ஏழுமலை, செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.