districts

img

உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 5-வது நாளாக போராட்டம்

திருவண்ணாமலை,மார்ச் 17- திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தாமல் இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.  உயர்மின்  கோபுரத்தால் பாதிக்கப்பட்ட  வீடு, கிணறு,நிலத்திற்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க மறுக்கும் பவர்கிரிட் நிறுவனத்தை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், நூக்காம்பாடி, ஊத்தாங்கல் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  புதனன்று துவங்கிய காத்திருக்கும் போராட்டம், தொடர்ந்து  4 ஆவது  நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் எஸ்.பலராமன் தலைமை தாங்கினார். இந்நிலையில் உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி, போளூர், கலசபாக்கம், வந்தவாசி பாஞ்சரை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.