திருவள்ளூர், நவ. 17- மாற்று இடம் வேண்டி நரிக்குறவர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலு வலகத்தில் புதனன்று (நவ 16) கோரிக்கை மனு அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம்,செங்குன்றம் நாராவாரிக்குப்பம்,கலைஞர் நகர் பகுதி யில் 40 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குற வர்கள் வசிக்கின்றனர். நூறு ஆண்டு களுக்கும் மேலாக வசிக்கும் இவர்க ளுக்கு அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டி 25 ஆண்டு காலமாக மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கோரிக்கை வைத்து வரு கின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாற்று இடம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு கும்மிடிப்பூண்டி அருகே இடம் தருவதாக கூறி யுள்ளனர்.அதில் அம்மக்களுக்கு உடன்பாடு இல்லை.தாங்கள் வசிக்கும் செங்குன்றம் பகுதியிலேயே குழந்தை கள் படித்துவருவதாகவும், வாழ்வாதா ரத்திற்காக தொழில்கள் செய்து வரு வதாகவும் அதனால் தங்களுக்கு வசிப்பிடத்தின் அருகிலேயே நிலம் வழங்க வலியுறுத்தி பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.