திருவள்ளூர், பிப் 19- திருவள்ளூர் மாவட்டத் தில் ஆவடி மாநகராட்சி, 6 நகராட்சிகள், மற்றும் 8 பேரூராட்சிகளில் 315 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடை பெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 1,797 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறன்றனர். இதற்கான வாக்குப் பதிவு பிப். 19 காலை 7. மணி முதல் மாலை 6 - மணி வரை நடைபெற்றது.இதில் பெண்கள், முதி யோர்கள் வாக்கு பதிவு தொட ங்கியது முதல் உட்சாகமாக வரிசையில் நின்று வாக்களித் தனர். மாலை 5 மணி நிலவரப்படி 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந் தது.