திருவள்ளூர், ஏப் 29- கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு மின் இணைப்பு கிடைக்க தடையில்லா சான்று வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாது காப்பு சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்ட மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சங்கத்தின் திருவள் ளூர் மாவட்ட மாநாடு வியா ழனன்று (ஏப்.28) மீஞ்சூரில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் பி.கதிர்வேலு தலைமை தாங்கினார். மாநில அமைப்புக் குழு உறுப்பினர் வி.செல்வம் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துள சிநாராயணன் வாழ்த்திப் பேசினார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாது காப்பு சங்கத்தின் மாநில அமைப்பாளர் சாமி நடராஜன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்டத் தலைவராக எஸ்.இ. தேவராஜூலு, செயலாளராக எம்.வி.நக்கீரன், பொரு ளாளராக பி.கதிர்வேலு ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்வோர், சிறுகடை வியாபாரிகளுக்கு அந்தந்த இடங்களுக்கான நியாய மான விலையை தீர்மா னித்து, கிரைய தொகையை தவணை முறையில் பெற்றுக் கொண்டு, அந்த இடங்களை பயனாளிக ளுக்கு சொந்தமாக்க வேண்டும். வாடிக்கையா ளர்கள் பெரும் தொகையை கட்ட வேண்டும் என தாக்கீது களை அனுப்பி மிரட்டுவதை கைவிட வேண்டும் உள் ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.