districts

காவல் துறை அதிகாரி அராஜகத்திற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

திருவள்ளூர், மார்ச் 18- காவல்துறை உயர் அதிகாரி கணேஷ் குமாரின் அராஜகத்தை கண்டித்து ஊத்துக்கோட்டையில் மார்ச் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சாரதி,  வேலூர் மாவட்டத்திற்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்த கணேஷ்குமார் புதிதாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்றதிலிருந்து வழக்கறிஞர்க ளுக்கும் இவருக்கும் மோதல் அதிகரித்து வந்தது.   நீதிமன்றத்திற்கு காரில் வரும் வழக்கறி ஞர்கள் காரை இங்கு நிறுத்தக்கூடாது அங்கு நிறுத்தக்கூடாது என்று பிரச்சனை செய்தார்.  புகார் தாரர்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது வழக்கறி ஞர்களுடன் வரக்கூடாது ,புகார் மனுக்களை பொது மக்களுக்கு வழக்கறி ஞர்கள் எழுதிக் கொடுத்தால் அவர்களை ஒருமையில் பேசுவது என அடுத்தடுத்து பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் ஒருவர் தனது வீட்டு விசேஷத்திற்கு பழங்களை காரில் ஏற்றுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காவல்துறை அதிகாரி அந்தக் காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். இதனால் வழக்கறிஞருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் முற்றியது.  இவ்வாறு தொடர்ந்து வழக்கறிஞர்களிடம் முரண்பாடாக நடந்து கொள்ளும் கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் மார்ச் 16, 17,  ஆகிய இரண்டு நாட்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.