திருவள்ளூர், மார்ச் 19- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம் திருவள்ளூரில் ஞாயிறன்று (மார்ச்-19) நடை பெற்றது. இதற்கு சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் வி.குமார் தலைமை தாங்கி னார். மாநில பொதுச் செயலாளர் எம். சிவாஜி, செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிர ணியம், பொருளாளர் எம்.உமாபதி, துணை பொதுச் செயலாளர்கள் எம்.சந்திர சேகரன், வி.ஜெயகோபால், ஆர்.முருகன், சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் உட்பட மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது, ஆன்லைன் அபராதத்தை கைவிடப்பட வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தப்பட வேண்டும், முத்தரப்பு குழு அமைக்க வேண்டும், ரயில் நிலை யங்களில் ஆட்டோ போன்ற வாக னங்களுக்கு கட்டணங்களை முறைப் படுத்தி பாஸ் வழங்க வேண்டும், நல வாரிய பணப்பயன்கள் உயர்த்தி வழங்க வேண்டும், நலவாரிய குளறுபடிகளை சீரமைக்க வேண்டும், 60 வயது முடிந்த தொழி லாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ரேபினோ பைச் டேக்சியை தடை செய்ய வேண்டும், தொழி லாளர் மக்கள் விரோத கொள்கை களை கடைபிடிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஏப்ரல் 5 அன்று தில்லி யில் பிரமாண்ட அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து 500 ஆட்டோ தொழி லாளர்கள் பங்கேற்பது போன்ற தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.