திருவள்ளூர்,ஜன.23- ரயில் அருகே வந்ததால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் தனது இருசக்கர வாகன த்தை தண்டவாளத்திலேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இதனால் விரைவு ரயிலின் இன்ஜி னுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் ்கொண்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமையன்று இரவு 8.55 மணி அளவில் ஆலப்புழா நோக்கி ஆலப்புழா விரைவுரயில் புறப்பட்டு சென்று கொண்டி ருந்தது. திருவள்ளூரை அடுத்த செவ்வாய்ப்பேட்டை ரயில்வே கேட் பகுதி யில் ரயில் வருவதை பார்க்காமல் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றார். ரயில் அருகே வந்ததால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் தனதுபைக்கை தண்டவாளத்திலேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இதனால் விரைவு ரயில் இன்ஜினுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மோட்டார் சைக்கிளை ரயில் இழுத்துச் சென்றது. புட்லூர் ரயில் நிலையம் அருகே வந்த போது ரயிலுக்கு அடியில் சத்தம் வருவதை உணர்ந்த ரயில் ஓட்டுநர் ரயிலை உடன டியாக நிறுத்தினார். அப்போது ரயில் என்ஜி னில் மோட்டார் சைக்கிள் சிக்கி இருப் ்பது தெரிந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத் ்திற்குப் பின் ரயிலுக்கு அடியில் சிக்கி நசுங்கி இருந்த மோட்டார் சைக்கிளை உடைத்து வெளியே எடுத்தனர். இதனால் ஆலப்புழா விரைவு ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புட்லூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.