திருவள்ளூர், நவ 27- இருளர் இன மக்களுக்கு பட்டா கொடுக்க வில்லை என்றால், டிச 12 அன்று குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தை மேற்கொள்வோம் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் சூரிய நகரம் ஊராட்சி தெக்க ளுர் இருளர் காலனியில் 20 ம் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டு களாக வசித்து வருகின்றனர். பலகட்டப் போராட்டங்களுக்கு பிறகு இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்கியது. அதற்கான பட்டாவை இதுவரை வழங்க வில்லை. பட்டா கேட்டு கடந்த 3 ஆண்டு களாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் போராடி வருகிறது. இந்த நிலையில் அக் 17 அன்று காத்தி ருக்கும் போராட்டத்தின் போது ஒரு பயனாளிக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டது. மேலும் நவ 22 அன்று 4 பயனாளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்கி யுள்ளார். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஒருவருக்கு என்று தவணை முறையில் பட்டா வழங்குவதை கண்டித்துள்ளனர். இதனால் அனைவருக்கும் பட்டா கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டு கள் காத்திருப்பது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர். பட்டா கிடைத்ததும் தொகுப்பு வீடுகள் சாலை, மின் இணைப்பு, குடிநீர் வழங்க வேண்டும். பருவ மழை தொடங்கி யுள்ள நிலையில் இருளர் இன மக்களை ஆடு, மாடுகளை போல நடத்தாமல் உரிய முறையில் அவர்க ளுக்கான சலுகைகள் உரிமைகள் கிடைப்பதை அரசும், அதிகாரிகளும் உறுதிப்படுத்தவேண்டும் என்று சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழரசு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் நவ 24 அன்று திருத்தணி கோட்டாட்சியரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.தமிழரசு, மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை ஒன்றிய தலைவர் பார்த்திபன், செய லாளர் ஜி.மணிகண்டன், சிபிஎம் வட்ட செயலாளர் வி.அந்தோணி ஆகியோர் சந்தித்து பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். உடனடியாக பட்டா வழங்கவில்லை என்றால் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் டிச. 12 அன்று குடிசைகள் அமைத்து குடியேறுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.