அவிநாசி, ஜன. 6- அவிநாசி அருகே சிப்காட்க்கு விவசாயம் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தினை கைவிட அரசாணை வெளியிட வலியுறுத்தி வலுவான போராட்டத்தை முன்னெடுப்பது என பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட தத்தனூர், புலிபார், புஞ்சைதாமரைக் குளம் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதி யில் சிப்காட்டுக்கு நிலம் கையகப்ப டுத்தப்படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளுடனான கலந்துரை யாடல் கூட்டம் அவிநாசி போத்தம் பாளையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கத் தின் மாவட்ட தலைவர் மதுசூத னன், செயலாளர் ஆர்.குமார், மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றியத் தலைவர் முத்துரத்தினம், புஞ்சை தாமரைக் குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர் குமாரசாமி, போத்தம் பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வேலாயு தம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்தப்படமாட் டாது என தமிழக அரசு உடனடி யாக அரசாணையை வெளியிட வலியுறுத்தி விவசாயிகள் ஒன்றி ணைந்து வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.