districts

img

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உற்பத்தி செய்வோர் மீது நடவடிக்கை

திருப்பூர், ஜன.6- மத்திய மற்றும் மாநில  அரசால் தடைசெய்யப்பட் டுள்ள, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீனினங்களை உற்பத்தி செய்வோர் மற்றும்  வளர்ப்போர் மீது குற்றவி யல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித் துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது, தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆப்பி ரிக்கன் கெளுத்தி மீனினங்களை உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் முறைக்கு முற்றி லும் தடைவித்துள்ளது. ஆகவே, இவ்வாணையை மீறி தடை செய்யப்பட்ட  கெளுத்தி மீனினங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் வளர்ப்பு செய்வோர்  மீது குற்றவியல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனவும், சம்மந்தப்பட்ட மீன்வளர்ப்புக் குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அரசால் அழிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.  மேலும், மீன் பண்ணைகளில் கட்லா,  ரோகு, மிர்கால், சாதா, கெண்டை, புல் கெண்டை, வெள்ளிக் கெண்டை மற்றும்  கண்ணாடிக் கெண்டை மீன்கள் போன்ற இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மட்டுமே வளர்க்க அனும தியுண்டு. இவ்வகையான மீன்களை வளர்ப்பதற்கு மீன்வளத்துறையால் பல்வேறு திட்ட மானியங்கள் வழங்கப்ப டுகின்றன. இதுகுறித்தான மேற்கொண்ட தகவலுக்கு மீன்வள உதவி இயக்குநர் ஈரோடு (0424 2221912), மீன்வள மேற் பார்வையாளர் (96291 91709) ஆகியோரை தொடர்பு கொண்டு மீன்வளர்ப்பில் உள்ள  பல்வேறு திட்டங்களை அறிந்து பயன்பெ றுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவிட் துள்ளார்.