districts

img

இந்திய மாணவர் சங்கத்தின் 55 ஆவது அமைப்பு தின பேரணி

இந்திய மாணவர் சங்கத்தின் 55 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு பல்லடத்தில் ஞாயிறன்று பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கம் 55 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைப்பு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்பு முன்னாள் மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் டி.ஜெயபால் அமைப்ப தின பேரணியை துவங்கி வைத்தார்.  இப்பேரணி பல்லடம் மங்கலம் சாலையில் துவங்கி, என்ஜிஆர் சாலையில் நிறைவடைந்தது.  இதில் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் நிதீஷ் நாராயணன்,  மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் அரவிந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார், மாவட்டத் தலைவர் கல்கி ராஜ், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் சாலையில் மாவட்டத் தலைவர் கல்கி ராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் அகில இந்திய துணைத் தலைவர் நிதீஷ் நாராயணன் சிறப்புரையாற்றினார்.  மாநிலத் தலைவர் சம்சீர் அகமது மாநிலச் செயலாளர் அரவிந்தசாமி மாவட்ட செயலாளர் பிரவீன் குமார்,  மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவை நடத்த கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இக்கையெழுத்து இயக்கத்தை அகில இந்திய துணைத் தலைவர் நிதீஷ் நாராயணன் கையெழுத்துட்டு துவங்கி வைத்தார்.