திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில், சாலக்கடை அருகே தடுப்புச் சுவற்றில் சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து கோவை வேளாண் கல்வித்துறைக்கு சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் அருகே உள்ள சாலக்கடை என்ற பகுதியில் தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக சொகுசு கார் மோதியது. இதில், பயணம் செய்த நாகராஜ் (23) பிரேமலதா (43) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து படுகாயமடைந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கல்யாணசுந்தரம் (61) என்பவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து படுகாயமடைந்த சுமித்ரா (19) என்பவரை மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.