திருப்பூர், ஏப்.23- இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற முழக்கத்துடன் தமிழகத்தில் நான்கு முனைகளில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பயணம் தொடங்கியிருக்கும் நிலையில் கோவை பயணக் குழுவுக்கு திருப்பூர் மாநகரில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பாலச்சந்திர போஸ் தலைமையில் செ.மணிகண்டன், கே.எஸ்.கனகராஜ் உள்பட 40 பேர் கொண்ட பயணக்குழு சனியன்று பல்லடம் அறி வொளி நகரில் இருந்து புறப்பட்டு திருப்பூர் மாநகராட்சி பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவுக்கு வந்தது. அங்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், மாதர் சங்க முன்னாள் மாவட்டத் தலை வர் அங்கு லட்சுமி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி செயலாளர் எஸ்.சண்முகம் உள்ளிட் டோர் வாலிபர் சங்க பயணக் குழுவின ருக்கு வரவேற்புக் கொடுத்தனர். இதையடுத்து சைக்கிள் பயணக் குழுவினர் பல்லடம் சாலை வழியாக தென்னம்பாளையம் சந்தைபேட்டையை அடைந்தனர். அங்கு மாற்றுத் திறனாளி கள் சங்க மாவட்டத் தலைவர் டி.ஜெயபால், சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன், வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் பா.ஞானசேகரன், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதா சிவம், பாடகர் வேலா இளங்கோ உள்ளிட் டோர் வரவேற்பு அளித்தனர். பயணக் குழுவை வாழ்த்தி டி.ஜெயபால் உரையாற் றினார். நோக்கத்தை விளக்கி பாலச்சந்திர போஸ் உரையாற்றினார்.
இதையடுத்து வெள்ளியங்காடு நால் ரோடு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் பொம் முதுரை, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ், கட்சிக் கிளைச் செயலா ளர் சந்திரசேகர், வாலிபர் சங்க தெற்கு மாநகர நிர்வாகி சஞ்சீவ் உள்ளிட்டோர் பங் கேற்று பயணக்குழுவுக்கு வரவேற்பு அளித் தனர். பின்னர் இக்குழுவினர் பட்டுக்கோட்டை யார் நகர் சென்று அங்கிருந்து காங்கேயம் சிடிசி கார்னர் பகுதிக்கு சென்றனர். அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரக்குழு உறுப் பினர் சரவணன் தலைமை வகித்தார். இதில் வாலிபர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலா ளர் செ.மணிகண்டன் சைக்கிள் பயண நோக் கத்தை விளக்கிப் பேசினார். கட்சியின் தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் செந்தில் குமார், வாலிபர் சங்க நிர்வாகி நவீன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பிற்பகல் திருப்பூர் தியாகி குமரன் நினைவகத்தை வந்த டைந்த வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சார பயணக் குழுவினருக்கு உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இங்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா.ஞானசேக ரன் தலைமையில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது வாழ்த்திப் பேசினார். பயணக்குழு சார்பில் பாலச்சந்திரபோஸ், செ.மணிகண்டன் ஆகி யோர் உரையாற்றினர். இங்கு திரளா னோர் கலந்து கொண்டனர்.