திருநெல்வேலி, ஏப்.23- கொரோனா முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 300 படுக்கைகள் உள்ளது என மருத்துவ மனை முதல்வர் ரவிச்சந்திரன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், மீறுவோருக்கு ரூ.500 அபரா தம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக முகக் கவசம் அணிவது குறித்து காவல்துறை யினர் பல்வேறு இடங்களில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து மருத்துவ மனைகளிலும் மீண்டும் கொரோனா வார்டுகளை மறு கட்டமைப்பு செய்ய தமிழக மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன்படி நெல்லை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் கூறியதாவது:- ‘‘நெல்லை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கொ ரோனா வார்டுகள் தொற்று குறைந்த நிலையிலும் அகற்றப்படாமல் இருந் தது. தற்போது அது புதுப்பிக்கப்பட்டு 300 படுக்கை வசதியுடன் தயார் நிலை யில் உள்ளது. மருத்துவமனைக்கு வரு வோர் கண்டிப்பாக முகக் கவசம் அணி வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகள் தொ டர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொற்று அதிகரித்தாலும் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம்’’. இவ்வாறு அவர் கூறினார்.