தூத்துக்குடி,டிச.23 சாத்தான்குளம் அருகே உள்ள கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் தாலுகா நெடுங்குளம் கிராமம் வேலன் புதுக்குளம் அருகே புதிதாக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
சாத்தான் குளம் பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து வரும் கனரக வாகனங்களால் சாலை சேத மடைவதுடன் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப் பட்டு வருவதாக கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நெடுங்குளம் கிராமம் வேலவன் புதுக்குளம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் புதிய கல்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது என ஏற்கனவே பல்வேறு தரப்பிலிருந்து மனுக்கள் கொடுத்தும், போராட் டங்களும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கல்குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் 200 குடியிருப்பு உள்ளன. முழுமையாக விவசா யம், ஆடு, மாடு வளர்த்து வருகி றோம்.
கிராமம் அருகே கல்குவாரி யில் வெடி வைப்பதால் கிராமமே அதிர்ந்து வருகிறது. ஆகையினால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அச்சம் அடைந்துள்ளனர். மேலும் கனரக வாகனம் தாங்கள் பகுதியில் வேகமாக வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையினால் தங்கள் பகுதியில் கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சிய ரிடம் வலியுறுத்தி மனு அளித்த னர். மேலும் காவல்துறையினரை வைத்து கல்குவாரி உரிமையா ளர்கள் கிராம இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருவ தாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.