தூத்துக்குடி, ஆக.13- நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் முத்தை யாபுரம் கே.டி.கோசல்ராம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலை மையாசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஸ்பிக் நிறு வன முதுநிலை மேலாளர் (நிர்வாகம்) ஜெயப்பிரகாஷ் மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடியை வழங்கி னார்.