தூத்துக்குடி, ஆக.14- ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள், ஆக.22 ஆம் தேதி தனி வட்டாட்சியர் அலுவ லகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் தெய்வ குருவம்மாள் விடுத் துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம் கிராமத்தில் 19.12 ஏக்கர் நிலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்து, 502 பயனாளி களுக்கு 1998, 1999ஆம் ஆண்டுகளில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. தற்போது சென்னை உயர்நீதிமன்ற வழக்குபடி 16.10 ஏக்கர் நிலத்தை மறு அளவீடு செய்து, ஏற்கெனவே 1998 - 1999 இல் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பய னாளிகளுக்கு மீண்டும் பட்டா வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. எனவே, மேற்படி நிலத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா பெற்ற பயனாளிகள் தங்க ளுக்கு வழங்கப்பட்ட அசல் இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் இதர ஆவணங்களு டன் கோவில்பட்டி தனி வட்டாட்சியர் (ஆதி திராவிடர் நலம்) அலுவலகத்தில் இம்மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.