districts

விசைப்படகு மீனவர்கள்  சாலை மறியல்

தூத்துக்குடி, மார்ச்.12- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 240 விசைப்படகுகள் உள்ளன. தற்போது மீன்பிடி துறைமுகத்தில் ஆழப்படுத்தும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவு பெற உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனிடையே தங்கு கடல் மீன்பிடித்தலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தங்கு கடல் மீன்பிடித்தலுக்கு மீன்வளத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தங்குகடல் முறையில் மீன்பிடிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி விசைப்படகு உரிமையாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேவியர் வாஸ் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.