கடமலைக்குண்டு, மார்ச் 30- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே மூலக்கடை ஊராட்சியில் சிறப் பாறை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிரா மத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராமத்தில் முறையான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக் கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத் தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திறந்தவெளி கிணறு என்பதால் நீரில் அதிக அளவில் தூசிகள் படிந்து காணப்படுகிறது. மேலும் தற்போது நீரில் கொசு புழுக்கள் அதிக அளவில் உற் பத்தியாகி உள்ளதால் அதனை பிடித்து பயன்படுத்தும் பொதுமக்களுக்கு காய்ச் சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே குடிநீர் வசதி செய்து தரக் கோரி சிறப்பாறை கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மயிலா டும்பாறை ஒன்றிய அலுவலகத்தை முற்று கையிட்டனர். அப்போது ஒன்றிய ஆணை யர்கள் திருப்பதிமுத்து, கண்ணன், மூலக் கடை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 15 நாட்களில் சிறப்பாறை கிரா மத்திற்கு முறையான குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய ஆணையர்கள் உறுதியளித்தனர். இதனை யடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.