districts

img

குடிப்பதற்கு உப்பு நீர் வழங்குவதற்கு கண்டனம் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை

விருதுநகர், பிப்.21- விருதுநகரில் நகராட்சி நிர்வாகம் குடிப்பதற்கு லாயக்கற்ற உப்புத் தண்  ணீரை வழங்குவதை கண்டித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   விருதுநகர் நகராட்சியில் பிள்ளையார் கோவில் தெரு, ஒளவையார் தெரு, தெற்கு  ரத வீதி, கத்தாளம்பட்டி தெரு ஆகியவை உள்ளன. இங்கு நகராட்சி சார்பில் 10  நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குடிப்பதற்கு தகுதியற்ற உப்பு சுவை மிகுந்த குடிநீரை பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு மற்றும்  திங்களன்று இப்குதிகளுக்கு குடிநீர் வழங் கப்பட்டது. அப்போதும் வழக்கம் போல உப்புத்தன்மை அதிகம் உள்ள குடிநீரே வழங்கப்பட்டது. இதனால், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல், தலை வலி, இருமல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் பிப்ரவரி 21 செவ்வாயன்று நகராட்சி  அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நகராட்சி  உதவி பொறியாளர் பாலாஜி, பஜார் காவல்  ஆய்வாளர் சித்ரகலா ஆகியோர் சமா தானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடி வில் தாமிரபரணி குடிநீர் அதிக அளவில் இப்பகுதிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்  கப்படும் என உறுதி அளித்தனர். இதை யடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி முருகன்,  நகரச் செயலாளர் எல்.முருகன், நகர்மன்ற உறுப்பினர் ஜெயக்குமார், ஸ்டாலின், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.