districts

img

மேகமலை வன விவசாயிகள் வெளியேற்றம் குறித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்க!

தேனி, ஜூன் 9- மேகமலை வன விவசாயி கள் வெளியேற்றம் குறித்து உயர்  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதி ராக உச்சநீதிமன்றத்தில் தமிழக  அரசு உடனே மேல் முறையீடு செய்ய வேண்டும் என தேனியில்  நடைபெற்ற அரசு ஆலோசனை  கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க பொதுச்செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மேகமலை வன விவசாயிகளை வெளியேற்றம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் தலைமையில் ஜூன் 9 அன்று  நடைபெற்றது. கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ. மகாராஜன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் முகமது முஜ் முல் அப்பாஸ், திருவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் காப்பக இயக்குநர் தீபக் பில்ஜி ,துணை இயக்குநர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, மாவட்ட வரு வாய் அலுவலர் தி.சுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப் பினர் கே.ராஜப்பன், மாவட்டச் செயலாளர் டி.கண்ணன், கர்ணல் பென்னிகுக் பாரம்பரிய மலை மாடு கள் வளர்ப்போர் சங்கத் தலைவர் கென்னடி, திமுக கடமலை -மயிலை ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியா ளர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: ஆலோசனை கூட்டத்தில் மேக மலை வன விவசாயிகளை வெளி யேற்ற உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு  முடிவடைய ஒரு மாதம் உள்ள நிலை யில் மறுகுடியமர்வு குறித்து விவ சாயிகளுடன் கலந்தாலோசனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன் தனது தொடக்க உரை யில் தெரிவித்தார். மறுகுடியமர்வு குறித்து ஆலோ சனை என்றால் இந்த கூட்டம் தேவை யற்றது. தீர்ப்பை எதிர்கொள்வது குறித்து பேசினால் பயனுள்ளதாக இருக்கும். கூட்டத்திற்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், விவ சாயிகள் அனைவரும் தமிழக அரசு  மேல்முறையீடு செய்ய வேண்டும்  என வலியுறுத்தினர். இந்த உயர் நீதி மன்ற தீர்ப்பை பொறுத்தமட்டில் வன உரிமை சட்டம் 2006 ஐ கணக்கில் கொள்ளவில்லை .1882 தமிழ்நாடு வனச்சட்டம், 1980 ஒன்றிய அரசின்  வன பாதுகாப்பு சட்டம் ஆகியவற் றின் அடிப்படையில் தீர்ப்பு வழங்  கப்பட்டுள்ளது .2018 வழங்கிய தவ றான தீர்ப்பை தான் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தற்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போதும் 2006 சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.அதில் உள்ள சட்டப்பிரிவுகளுக்கு தவறான கருத்துக்களை நீதிபதி கள் தெரிவித்துள்ளனர். இவை களை கணக்கில் கொண்டும், பல  தலைமுறைகளாக குடியிருந்து  வரும் மக்களை பாதுகாக்கும் வகை யிலும் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சி யர் பேசும் போது மறு குடியமர்வுக்கு ஆலோசனையாக தேக்கம்பட்டி யில் 29 ஏக்கர் நிலமும், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 1200 குடி யிருப்புகள் இருப்பதாக தெரி வித்தார். அதனை விவசாயிகள் சங்கம் ஏற்கவில்லை. தீர்ப்பை நிறை வேற்ற காலக்கெடு ஒரு மாதம் தான்  உள்ளது. நெருக்கடியான காலகட்  டத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வது தான் பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்தேன்.

வனத்தில் மாடுகளுக்கு அனுமதி
அது போல மஞ்சனூத்து சோத னைச் சாவடியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தடுக்கப்படு வதும், விளைபொருட்கள் கொண்டு வரப்படுவதை தடுத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருவதாகவும், மலை மாடு கள் குறித்த தீர்ப்புக்கு சங்கத்தின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலை மாடு களை வழக்கம் போல் மேய்க்க அனு மதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அதனைத் தொடர்ந்து பதிலளித்த முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், விவ சாயிகளுக்கு தொந்தரவு இரு ககாது, வனத்தில், தாங்கும் சக்  திக்கு ஏற்ப மாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்த தாக பெ.சண்முகம் கூறினார்.