தேனி, ஜூன் 7- தேனி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப் படும் குறைபாடுகளை களை வதற்கு வருகிற ஜூன் 11ஆம் தேதி கீழ்க்கண்ட விவரப்படி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியகுளம் வட்டம் குள்ளப்புரம் கிராமத்தில் தனித் துணை ஆட்சியர் நா.சாந்தி, தேனி வட்டம் கொடுவிலார்பட்டி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மு.சாந்தி ஆகியோர் பார்வையாளர்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர். ஆண்டிபட்டி வட்டம் எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலர் விமலா ராணி ,உத்தம பாளையம் வட்டம் பண்ணைப் புரம் கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, போடி நாயக்கனூர் வட்டம் மீனாட்சி புரம் கிராமத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராஜ் ஆகி யோர் பார்வையாளராக நிய மிக்கப்பட்டுள்ளனர். இக்குறைகேட்கும் கூட்டத் தில் பொதுமக்கள் பொது விநி யோக கடைகள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்து, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் குறித்தும் மனு செய்யலாம்.