tamilnadu

தஞ்சையில் 9 இடங்களில்  நாளை பொது விநியோகத்  திட்ட குறைதீர் கூட்டம்  

தஞ்சாவூர், மார்ச் 12- தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட த்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை களைவ தற்கும், மக்கள் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யும் வகை யில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் மார்ச் 14  (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.  தஞ்சை வட்டம் மருங்கை-2, திருவையாறு வட்டம் வீரசி ங்கம்பேட்டை, ஒரத்தநாடு வட்டம் கக்கரை, பூதலூர் வட்டம் சானூரப்பட்டி, கும்பகோணம் வட்டம் மூப்பக்கோயில், பாப நாசம் வட்டம் மாகாளிபுரம், திருவிடைமருதூர் வட்டம் அத்தி ப்பாக்கம், பட்டுக்கோட்டை வட்டம் புதுப்பட்டினம், பேராவூ ரணி வட்டம் கொளக்குடி (பூலாங்கொல்லை) ஆகிய இடங்க ளில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் முகாமிட்டு ள்ள வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து பொதுமக்கள் தீர்வு காண லாம் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரி வித்துள்ளார்.