கடலூர், ஆக. 19- கடலூர் மாவட்டம் சாத்தமங்கலத்தில் இருளர்களுக்கான குறைதீர் கூட்டம் நடை பெற்றது. விருத்தாசலம் அருகே உள்ள சாத்த மங்கலம் கிராமத்தில் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த இருளர்கள் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்க ளுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்குதல், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. இதுதொடர்பாக, ரோடு தொண்டு நிறுவனம் ஏற்பாட்டில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித் குமார் தலைமையில் செவ்வாயன்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், தகுதியான வர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருத்துவ பரிசோதனையும், கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்த ஊரில் சுமார் 50 குடும்பத்தினர் நீர் நிலை புறம்போக்கில் குடியிருந்து வருவதால் அவர்களுக்கு மாற்று இடம் கோரப்பட்டது. வருவாய் துறையினர் இடத்தை ஆய்வு செய்து மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.