தஞ்சாவூர்/திருவாரூர், ஏப்.16 - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில், திமுக அரசு பொறுப்பேற்ற ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் சனிக்கிழமை காலை, தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று விவசாயி களிடம் கலந்துரையாடி பின்னர் அரசின் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். பட்டுக்கோட்டை தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, காணொலிக் காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் கா.அண்ணா துரை (பட்டுக்கோட்டை), என்.அசோக் குமார் (பேராவூரணி), ஒன்றியப் பெருந் தலைவர்கள் பழனிவேல் (பட்டுக் கோட்டை), மு.கி.முத்துமாணிக்கம் (சேதுபாவாசத்திரம்), மின்வாரிய செயற் பொறியாளர் பி.மாறன், உதவி செயற் பொறியாளர்கள், உதவி மின் பொறியா ளர்கள் மற்றும் மின் வாரிய பணியா ளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 600-க்கும் மேற்பட்ட மின் இணைப்பு பெற்ற பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி விவசாயிகளும் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை, பேரா வூரணி சட்டமன்றத் தொகுதியில் 930 விவ சாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் ஓராண்டில் விவசாய மின் இணைப்புப் பெற்ற விவசாயிகளிடம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக கலந்துரை யாடிய நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பி னர் எம்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மின் பகிர்மான வட்டத்தில் ரூ.1197.75 லட்சம் மதிப்பீட்டில் 1324 விவசாய மின் இணைப்புகள் வழங் கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.