districts

img

நிலக்கரி சுரங்கங்கள் ரத்து அறிவிப்பை வெளியிடாவிட்டால் மே மாதம் மோடி அரசைக் கண்டித்துப் போராட்டம் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவிப்பு

தஞ்சாவூர், ஏப்.9 -  நிலக்கரிச் சுரங்க ஏலப்பட்டியலி லிருந்து தமிழ்நாட்டுப் பகுதிகளை நீக்க வேண்டுமென என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் வலி யுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமை வகித்தார்.  கூட்டத்தின் முடிவு குறித்து பெ. சண்முகம் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:- மார்ச் 29- ஆம் தேதி ஒன்றிய  அரசு காவிரி டெல்டா மாவட்டங் களில், புதிதாக நிலக்கரி சுரங்கத்தை  தொடங்குவதற்கான ஏல அறி விப்பை வெளியிட்டது. இதைக் கண்டித்து முதல்வர், பிரதமருக்கு மிகக் கடுமையான முறையில் ஆட்சேபம் தெரிவித்துக் கடிதம் எழுதினார். சட்டமன்றத்தில் ஒரு கவன  ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது விவாதம்  நடத்தி, ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் விதமாக உறுப்பினர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர். இந்த இரண்டு நடவடிக்கைகளையும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் பாராட்டுகிறது, வரவேற் கிறது. பிரதமர் தமிழகம் வந்ததை யொட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊடகங்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து திட்டமே ரத்து  செய்யப்பட்டுவிட்டது என்ற முறை யில் ஊடகங்களும் பல்வேறு அமைப் புகளின் தலைவர்களும் கருத்துக் களைத் தெரிவித்துள்ளனர். திட்டம் ரத்து செய்யப்படவில்லை, ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் வாக்குறுதி தான் அளித்துள்ளார். அது ரத்து சம்பந்தமான உத்தரவு அல்ல. தமிழ்நாட்டு பகுதிகளுக்கு ஏலத்திலிருந்து விலக்களிக்கப்படும் என வாக்குறுதி  வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக இன்றைய தேதி  வரை தமிழ்நாட்டுப் பகுதிகள்  நீக்கப்படவில்லை, அதிகாரபூர்வ மாக நிலக்கரி அமைச்சகத்தில் இருந்து  எந்த உத்தரவும் வரவில்லை. தமிழ் நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதல்வருக்கு இதுவரை அதிகாரப் பூர்வமான பதில் ஒன்றிய அரசிட மிருந்தோ பிரதமர் அலுவலகத்தில் இருந்தோ வரவில்லை. அண்ணாமலை வந்து பார்த் தார். அவரது கோரிக்கையை ஏற்று  விலக்களிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார் அமைச்சர். பாஜக  அமைச்சர்கள் அளிக்கும் வாக்குறு திக்கு உத்தரவாதம் கிடையாது.   காவிரி டெல்டா பகுதி பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலம். தமிழகத்தின் நெற்களஞ்சியம். நெற்களஞ்சியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நிலக்கரி சுரங்கம், பெட்ரோல் எடுப்பது, மீத் தேன், ஷேல் கேஸ் என எந்தவொரு திட்டத்தையும் ஒன்றிய-மாநில அரசு கள் நிறைவேற்றக் கூடாது. நிலக்கரி அமைச்சகம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்திற்கு விலக் களிக்கப்படும் என்ற உத்தரவை வெளியிட வேண்டும். ஏலப் பட்டியலி லிருந்து தமிழ்நாட்டுப் பகுதிகளை நீக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றத் தவறினால்  மே முதல்  வாரத்தில்  காவிரிப் படுகை பாது காப்பு கூட்டியக்கம் ஒன்றிய அரசுக்கு  எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின், மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கே.முகமது அலி, வி. சுப்ரமணியன், அ.பன்னீர் செல்வம்,  மு.மாதவன், துரைராஜ், தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் வீர.மோகன், பி.செந்தில்குமார், பி.எஸ்.மாசிலாமணி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர்,  மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன், வேளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ.திருநாவுக்கரசு, சம வெளி விவசாயிகள் இயக்க ஒருங் கிணைப்பாளர் சு.பழனிராஜன், சிபி எம்எல் மக்கள் விடுதலை துரை.மதிவாணன் மற்றும் தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய ஏழு மாவட்டங் களைச் சேர்ந்த விவசாயப் பிரதி நிதிகள், பல்வேறு அமைப்பின் தலை வர்கள்  கலந்துகொண்டனர்.