districts

img

தஞ்சை வந்த ஒன்றியக் குழுவிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

தஞ்சாவூர், அக்.16 -  தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த, ஒன்றிய அரசின் ஹைதராபாத் உணவுக் கழ கத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக் கட்டுப்பாடு பிரிவு துணை இயக்குநர் எம்.இசட்.கான், இந்திய உணவுக் கழக சென்னை தரக் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப பிரிவு அலுவலர் சி. யுனஸ் ஆகியோரிடம், தஞ்சாவூர் ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னி லையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “தற்போது தமிழ கத்தில் பெய்து வரும் கன மழையா லும், காற்றில் ஈரப்பதம் கூடுதலாக உள்ளதாலும், அறுவடை செய்யப் படும் நெல்லில் ஈரப்பதம் கூடுதலாக உள்ளது. அரசு கொள்முதல் செய்யும்  17 விழுக்காடு என்பது சாத்தியமற்ற தாக உள்ளது.  அதனால் தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை  காய வைக்க முயற்சித்தும் தொடர்ந்து  பெய்யும் மழையால் காய வைக்க முடிய வில்லை. இதனால் விவசாயிகள் தின மும் மிகுந்த மன உளைச்சல் அடைவ தோடு, பொருட்செலவும் ஏற்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, விவ சாயிகளின் நலன் கருதி, மாநில அரசு கோரியுள்ளவாறு 22 விழுக்காடு ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்திட, ஒன்றிய அரசு அனுமதி வழங்கிட வேண்டும்  என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.  அப்போது, சிபிஎம் தஞ்சை ஒன்றி யச் செயலாளர் கே.அபிமன்னன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.