tamilnadu

img

விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்க! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

திருநெல்வேலி, மே 27- மத்திய-மாநில அரசுகள் விவசாயத்திற்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது. நூறு நாள் வேலைதிட்டத்தை விவ சாய பணிகளுக்கு பயன்ப டுத்த வேண்டும். சிறுகுறு விவ சாயிகளுக்கு உயர்நீதி மன்றம் அறிவுறித்திய ரூ.10 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும். பிரதம மந்திரி விவசாயிகள் உதவித் திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழ ங்குவதை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள், விவசாய தொ ழிலாளர்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராஜகுரு மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தார். முன்ன தாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுடலைராஜ், சிபிஎம் பாளை தாலுகா பா.வரகுணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க த்தினர்கலந்து கொண்டனர்.

சிவகிரி
தென்காசி மாவட்டம் சிவகிரியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் நடரா ஜன் தலைமையில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.