கும்பகோணம், ஜன.8 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி ஆரூ ரான் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலு வைத் தொகை மற்றும் விவ சாயிகளின் பெயரில் வங்கி நிர்வாகமும், ஆலை நிர்வா கமும் மோசடியாக பெற்ற கடனை திருப்ப செலுத்த வேண்டும். ஆலை நிர்வா கத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கடந்த 40 நாட்களாக கரும்பு விவசாயிகள் தொ டர்ந்து போராடி வருகின்ற னர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் கும்பகோணம் ஒன்றியம் தேவனாஞ்சேரி கடைவீதி யில் மாவட்டத் துணைத் தலைவர் கணேசன் தலை மையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநில செயலாளர் தங்க.காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய துணைத் தலைவர் ராஜாராம், ஒன்றிய துணைத் தலைவர் ஆர்.ஜெய பால், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.