districts

img

பயிர்க் காப்பீடு திட்டம் முழுவதையும் மாநில அரசே செயல்படுத்த வேண்டும் டெல்டா விவசாயிகள் அமைச்சர்களிடம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூன் 7 -   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், காவிரி டெல்டா மாவட்டங் களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெல் சாகுபடி முன்னேற்பாடுகள் தொடர் பான ஆலோசனைக் கூட்டம் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வந்தவர்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வர வேற்றார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திட்ட  விளக்க உரையாற்றினார்.  பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், “விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தனியார்  வியாபாரிகளிடம் விற்பனை செய்யா மல் அரசு டெப்போக்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடுதுறை 37, ஏஎஸ்டி 16 ஆகிய நெல்  ரகங்கள் அதிக மகசூலை தரக் கூடி யது.  இந்த ரக விதைகளை அதிகளவில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பயிர் கடன் வழங்கி சாகுபடி பணியை தொடங்க கூட்டுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசா யிகள் கடன் பெற ஏதுவாக வருவாய் துறையினரால் வழங்கப்படும் அடங்கல்  சான்றிதழ்களை உரிய காலத்தில் வழங்கி விவசாயிகளுக்கு வருவாய் துறையினர் உதவிட வேண்டும். தேங்காய்க்கு உரிய விலை கிடைக் காததால் தென்னை விவசாயிகள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேங்காயை மூலப் பொருளாகக் கொண்டு பட்டுக்கோட்டை பகுதியில் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும்.  பயிர் காப்பீடு திட்டத்தில் மாநில அரசு  தனது பங்களிப்பை அதிகம் செலுத்து கிறது. எனவே பிற மாநிலங்களைப் போல் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக  அரசே ஏற்று நடத்த வேண்டும். இடு பொருட்களின் விலை 35 விழுக்காடு அதி கரித்துள்ளதால், அதற்கு ஏற்ற வகை யில் உற்பத்திப் பொருளுக்கான ஆதார  விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.   இனி வரும் காலங்களில் தூர்வாரும் பணியை மார்ச் மாதங்களிலேயே தொடங்கிட வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை அனைத்து விவ சாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து வழங்க வேண்டும்” என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

அமைச்சர்கள் பேட்டி 
கூட்டத்திற்கு பின் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  விவசாயிகள், விவசாய சங்க தலைவர் களை சந்தித்து, விவசாயிகளின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டு அவற்றை தீர்க்க வேண்டும் என முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார்.  அந்த அடிப்படையில் கடந்த 30, 31  ஆம் தேதிகளில் முதல்வர் டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய் தார். குறுவை தொகுப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. உரம், விதை, இடுபொருட் கள், கூட்டுறவு கடன் அனைத்தும் விவ சாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைப்பதற் காக ஆய்வுக்கூடத்திற்கு அமைச்சர்கள் வந்துள்ளோம்.  குறுவை சாகுபடி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக இருக்க  வாய்ப்புள்ளது. தூர்வாரும் பணிகள்  திட்டமிட்டு முழுவதும் நடைபெற்று முடிந் துள்ளன. கடைமடை வரை தண்ணீர் செல்லும். விதைகள், உரங்கள் தேவை யான அளவு உள்ளது. தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். கடை களில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால்  நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்து அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி யுள்ளனர். தரமற்ற விதைகளை விற்பனை  செய்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் 
ஐ.பெரியசாமி பேசுகையில், கடந்த  ஆண்டு ரூ.10,292 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு அதையும் தாண்டி ரூ.12,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவ சாயிகள் வீடு தேடி சென்று கூட்டுறவு  கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. கூட்டுறவு சங்க செயலாளர் கள், விவசாயிகளிடம் கனிவான முறை யில் நடந்துகொள்ள வேண்டும் தவறி ழைக்கும் செயலாளர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் உணவுத்துறை அமைச் சர் அர.சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் ச.சு.பழனிமாணிக்கம், செ.ராமலிங்கம், எஸ். கல்யாணசுந்தரம், சண்முகம், தமிழக  அரசின் தில்லி பிரதிநிதி விஜயன் மற்றும் கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி உள்ளிட்ட டெல்டா மாவட்ட எம்எல்ஏக்கள், மேயர்கள், வேளாண் துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து  கொண்டனர்.