தஞ்சாவூர், மே 11 - தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13 ஆவது கிளை மாநாடு கிளைத் தலைவர் பி.ஆயிராசு தலைமையில் நடை பெற்றது. மாநில துணைச் செயலாளர் களப்பிரன், மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் பேசி னர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் வாழ்த்திப் பேசினார். புதிய கிளைத் தலைவராக பி.ஆயிராசு, செயலாளராக பி.தாமரைச்செல்வன், பொரு ளாளராக வழக்கறிஞர் சேகர், துணைத் தலை வர்களாக அங்கமுத்து ஆசிரியர், எ.சி.வின்சென்ட், துணைச் செயலாளர்களாக ஸ்ரீதர், கலைச்செல்வி, செயற்குழு உறுப்பி னர்களாக பி.எம் இளங்கோவன், எம்.துரை ராஜ், அருணா ராஜேந்திரன், கரு.அரங்கரா ஜன், மணிகண்டன், வேங்கைமார்பன், விஜயன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில், “திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பல் சிகிச்சை மருத்து வரை நியமனம் செய்ய வேண்டும். திருக்காட் டுப்பள்ளி அரசு மருத்துவமனை பிண வறைக் கட்டிடம் இடிந்து சிதைந்து போன தால், இறந்து போன உடல்களை உடற் கூராய்வு சிகிச்சை செய்வதற்கு திருவை யாறு அரசு மருத்துவமனை அல்லது தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே உடனடியாக பழுதடைந்த கட்டிடத்தை முழுமையாக இடித்து விட்டு புதிய கட்டிடத்தை தமிழக அரசு கட்டித்தர வேண்டும். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் செயல்படக் கூடிய நூலகம் பழுதடைந்து உள்ளது. மேலும், நூலகத்தை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சுகாதார மான இடத்தில் நூலகத்தை இடம் மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.