districts

திருஆரூரான் சர்க்கரை ஆலை  தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை விவசாயிகள் சாலை மறியல்

பாபநாசம், ஜூன் 15 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு அரவைத் தொகை, வட்டி, வெட்டு கூலி, வண்டி வாடகை, தொழி லாளர்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து சுமார்  300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாபநாசத்தை அடுத்த  உத்தாணி அருகே மெயின் சாலையில் மறியல் போராட்டம்  நடத்தினர்.  இதில் விவசாயிகள் கூறுகையில், “கடந்த பல ஆண்டாக  கரும்பு அரவைத் தொகை, வட்டி, வெட்டு கூலி, வண்டி வாடகை, தொழிலாளர் சம்பளம் வழங்கவில்லை. ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடனை செலுத்த  வேண்டும். ஆலை நிர்வாகம் மாற உள்ள நிலையில், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்றனர். மறியல் குறித்து தகவலறிந்த கும்பகோணம் ஆர்.டி.ஓ லதா  நேரில் வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  பின்னர் மறியல் கைவிடப்பட்டது.