நாமக்கல், ஜன. 31- திருச்செங்கோட்டில் பருத்தி ஏலத்திற்கு அதிகாரிகள் காலதாமதமாக வந்ததால் விவ சாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பருத்தி உற்பத்தியை கூட்டுறவு சங்கத்திற்கு ஏலத் திற்காக கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் வியாழனன்று விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திற்கு பருத்தி கொண்டு வந்தனர்.நீண்ட நேரம் காத்திருந்து ஏலம் விடுவதற்கு அதிகாரிகள் கால தாமதம் செய்து கொண்டதால், ஆவேச மடைந்த விவசாயிகள் 200க்கும் மேற் பட்டோர் பருத்தி மூட்டைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தகவலறிந்து வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் இரு தரப்பினரையும் சமா தானம் செய்து முறையாக பருத்தி ஏலம் விடுவதாக கூறிய பின்னரே மறியல் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.