தஞ்சாவூர், ஜூன் 8 - தஞ்சாவூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாரியம்மன் கோயில் சமுத்திரம் ஏரியை சுற்றுலாத் தலமாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம், சமுத்திரம் ஏரியை தூர்வாரி சுற்றுலா தலமாக அமைக்கும் பணியை மும்முர மாக செய்து வருகிறது. தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயிலில் 250 ஏக்கர் பரப்பளவில் சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் அந்தப் பகுதியில் 116 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மாரியம்மன் கோயி லுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வெளி யூர் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த ஏரியை ஆழப்படுத்தி அங்கு படகு சவாரி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பி னர் ச.சு.பழநிமாணிக்கம், மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகி யோரது முயற்சியின்படி சமுத்திரம் ஏரி சுற்றுலாத் தலமாக மாற்றும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இதில் சமுத்திரம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்துதல், தூர்வாரிய மண்ணைக் கொண்டு தஞ்சாவூர் - நாகை சாலையோரம் சிறுவர் பூங்கா அமைத் தல், ஏரிக்குள் மூன்று இடங்களில் மலை போல் தீவு அமைத்தல், பறவைகள் தங்க ஏதுவாக ஆங்காங்கே மரங்களை நடுதல், படகு சவாரிக்கு ஏற்பாடுகளை செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக அரசு முதற்கட்ட மாக ரூ.8.86 கோடி நிதியை ஒதுக்கி யுள்ளது. இதுகுறித்து கல்லணைக் கால்வாய் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டி கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இந்த சமுத் திரம் ஏரியை தூர்வாரி, சுற்றுலாத் தலமாக மாற்றும் பணி நடைபெறு கிறது. முதலில் தூர்வாரும் பணியும், கரைகளைப் பலப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. அதேபோல் தூர்வாரிய மண்ணை கொண்டு சிறுவர் பூங்கா, ஏரியின் நடுவே தீவுகள் போன்றவை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஏரிக்கு செப்டம்பர் மாதம் தான் தண்ணீர் வரும் அதற்குள் பெரும்பா லான பணிகள் முடிக்கப்படும்” என்றார். இந்த சமுத்திரம் ஏரி தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.