districts

ராட்சத அலையால் படகு கவிழ்ந்தது கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

தஞ்சாவூர், மே 20 -  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், காந்தி நகரை சேர்ந்த, காமாட்சி என்பவருக்கு  சொந்தமான நாட்டுப்படகில் புதன்கிழமை, அதே பகுதியை சேர்ந்த காமாட்சி (58),  சூர்யா (22),  கலையரசன் (25), செல்வா(23),  கலைமணி (22) ஆகிய ஐந்து மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை  மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிக்கொண்டி ருந்த நிலையில், இரண்டு கடல் மைல் தூரத்தில், திடீரென சூறைக்காற்று வீசியதால்  ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி படகு தலை குப்புற கவிழ்ந்தது. இதையடுத்து படகில் இருந்த மீனவர்கள் 5 பேர் கடலில் விழுந்து,  சுமார் மூன்று மணி நேரமாக உயிருக்கு போராடினர். மேலும், உதவிக்கு யாரும் வரு வார்களா என்று கையில் வைத்திருந்த துண்டை மேலே உயர்த்தி வீசி காட்டியுள்ள னர். அப்போது, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கரையூர் தெரு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், உடனடியாக 5 மீன வர்களையும் மீட்டு கவிழ்ந்த படகையும் தங்களின் படகில் கட்டி இழுத்துக் கொண்டு கரைக்கு வந்தனர்.