districts

காவல்துறையினருக்கு தனி பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்

தஞ்சாவூர், டிச.17 -  காவல்துறையினருக்கு தனியாக பாது காப்புச் சட்டம் இயற்றி அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவ லர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சாவூரில், சனிக்கிழமை தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தின் 14 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலை வர் வி.தேவன் தலைமை வகித்தார். மாநிலத்  தலைவர் கே.வேலுச்சாமி சிறப்புரையாற்றி னார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற மாவட்டக் கூட்டத்தில், தற்போது ஓய்வூதி யர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படி 300 ரூபாயை, மத்திய அரசு ஓய்வூதியர் களுக்கு வழங்குவது போல 1,000 ரூபாயாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதிக்கான சந்தா தொகை  80 ரூபாயிலிருந்து 180 ரூபாய் உயர்த்தப் பட்டது. ஓய்வு பெறும் போது வழங்கப்ப டும் பணிக்கொடை தொகையை 15 ஆண்டு களில் இருந்து 12 ஆண்டுகளாக தமிழக அரசு குறைக்க வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, 80 வயது  தொடங்கும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப  ஓய்வூதியர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கி தமிழக அரசு அர சாணை வெளியிட வேண்டும். காவல்துறை யினருக்கு என தனி ஊதியக்குழு அமைத்து  தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். காவல்துறையினருக்கு தனியாக பாது காப்பு சட்டம் இயற்றி அமல்படுத்த வேண்டும்.  புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடி யாக செயல்படுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.