districts

தோகூர் - வேங்கூர் சாலையை சீரமைக்க கோரி பிப்.11 இல் சாலை மறியல்: சிபிஎம் அறிவிப்பு

பூதலூர், ஜன.30- தோகூர் - வேங்கூர் சாலையை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள் ளது. இதை வலியுறுத்தி பிப்.11-ஆம் தேதி  கல்லணையில் சாலை மறியல் போராட்டம்  நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.  பூதலூர் வடக்கு ஒன்றியம் கல்லணை சிபிஎம் கிளைக் கூட்டம், கிளைச் செய லாளர் அகிலா தலைமையில் நடைபெற் றது.  கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பி னர் வெ.ஜீவகுமார், கே.காந்தி, ஒன்றியக் குழு பாஸ்கர் மற்றும் கிளைத் தோழர்கள் கலந்து கொண்டனர்.  இதில், தோகூர் முதல் வேங்கூர் வரை  ஒரு கிலோ மீட்டர் வரை உள்ள சாலை  தார் போடப்படாமல், சீரமைக்கப்படாமலும் குண்டுங்குழியுமாக உள்ள சாலையை சீர மைக்க வலியுறுத்தி, பிப்ரவரி 11ஆம் தேதி காலை 10 சாலை மறியல் போராட்டம் நடத்  தப்படும். கொள்ளிடம் புதிய பாலம் வழி யாக செங்கிப்பட்டி, பூதலூர்  திருவையாறு பகுதிகளுக்கு செல்ல சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். குடிமனை இல்லாமல் மனு கொடுத்தவர்களுக்கு உடனடியாக குடிமனைப் பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.