districts

img

அரசாணை எண் 115, 152 ஐ ரத்து செய்க! அரசு ஊழியர் சங்க பேரவை கோரிக்கை

தஞ்சாவூர், நவ.24-  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட 15-ஆவது பேரவை வியாழனன்று தஞ்சையில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆ.அம்சராஜ் துவக்கி வைத்தார். மாவட்  டத் துணைத் தலைவர்கள் சா.தமிழ் வாணன், தி.ரவிச்சந்திரன், மாவட்ட இணைச் செயலாளர்கள் எஸ்.அறிவழ கன், எஸ். மகேஷ், ஆ.செந்தில்குமார், ஆ. தமிழ்வாணன், மாவட்டச் செயலாளர் ஆ. ரெங்கசாமி, மாவட்டப் பொருளாளர் கு. பாஸ்கரன், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ச.செல்வி ஆகியோர் பேசி னர்.  முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் எம்.என்.சாந்தா ராமன் மற்றும் துறை வாரி சங்கத் தலை வர்கள் வாழ்த்திப் பேசினர்.  அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலா ளர் சா.கோதண்டபாணி நிறைவுரையாற்றி னார். மாவட்ட துணை தலைவர் பா.முரு கன் நன்றி கூறினார். கூட்டத்தில், ‘‘தமிழக அரசு தனது தேர்  தல் வாக்குறுதியின் படி, புதிய பென்ஷன்  திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்  டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்த ரப் பணியிடங்களில் வெளி முகமை மூலம் ஆட்களை நியமித்திட வெளியிடப்பட் டுள்ள அரசாணை 152 ரத்து செய்ய வேண்  டும். அரசுத் துறையில் இருக்கும் நிரந்தர காலிப் பணியிடங்களில் வெளிமுகமை மூலம் ஆட்களை நியமிக்க வெளியிடப் பட்டுள்ள அரசாணை 115 ஐ நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்’’ என்பன உள்  ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.