districts

img

கர்ப்பிணிகளுக்கு  சத்துப் பொருட்கள் வழங்கல்

தஞ்சாவூர், ஆக.3-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ரோட்டரி சங்கம்  சார்பில், மேற்பனைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவில், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சத்துப் பொருட்கள் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டன.  நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர் மா.திருப்பதி தலைமை வகித்தார். ரோட்டரி சங்க செய லாளர் ஏ.எஸ்.செந்தில்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்  மஞ்சுளா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மருத்துவ அலுவலர்கள் ஜி.சுவாதி, எம்.சாரதி  ஆகியோர் கலந்து கொண்டு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்துப் பேசினர்.  இதில் 35 பேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பழங்கள்,  பிஸ்கட், பேரீச்சம்பழம், சத்துமாவு உள்ளிட்ட சத்துணவுப்  பொருட்கள் வழங்கப்பட்டன.