districts

img

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசுக்கு கண்டனம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாலை மறியல்

தஞ்சாவூர், ஜூலை 31 -  தில்லியில் போராட்டம் நடத்திய  விவசாயிகளுக்கு அளித்த வாக்கு றுதியை நிறைவேற்றாமல் ஒன்றிய அரசு துரோகம் செய்துவிட்டது. குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். தில்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஞாயிற் றுக்கிழமை தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற சாலை மறிய லுக்கு, விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேராவூரணி பெரியார் சிலை அரு கில், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப் பாளர் வீ.கருப்பையா தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில், விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை யில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் கே.பாலசுப்பிரமணி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பூதலூர் தெற்கு ஒன்றியம், செங்கிப் பட்டியில் நடைபெற்ற சாலை மறியல்  போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கெங்கை பாலு தலைமை வகித்தார். சமவெளி இயக்கம் சு.பழனிராஜன் கண்டன உரையாற்றினார்.
பாபநாசம்
பாபநாசத்தில் நடந்த மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க  மாநிலக் குழு உறுப்பினர் தர்மராஜன், கரும்பு விவசாயிகள் சங்கம் மாநிலக் குழு உறுப்பினர் காதர் ஹீசைன் தலைமை வகித்தனர்.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம் குடவாசல்  வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.சேகர்  தலைமை வகித்தார். விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கலைமணி கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினார்.  கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகே நடைபெற்ற சாலை மறிய லுக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின்  மாவட்ட துணை செயலாளர் எம்.சேகர்  (சிபிஎம்), விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர். ஜோசப் (சிபிஐ) ஆகியோர் தலைமை  வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, ஒன்றியச் செயலாளர் கே. செந்தில் ஆகியோர் கண்டன உரை யாற்றினார்.
திருத்துறைப்பூண்டி 
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் முத்துப்பேட்டை விவசாய சங்கங் களின் சார்பில் புதிய பேருந்து நிலையத் தில் சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர்கள் காரல் மார்க்ஸ், பழனிச்சாமி, கதிரே சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி யின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான எஸ்.துரை ராஜ் தலைமை வகித்தார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் பேரா.ஜெயராமன், ஜாக் அமைப்பின் பொதுச்  செயலாளர் ராயர், இயற்கை விவ சாயி மாப்படுகை இராமலிங்கம், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன், நிலம், நீர், பாதுகாப்பு கூட்டமைப்பின் இரணியன் மற்றும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மயிலாடுதுறை மாவட்டத் தலை வர் டி.சிம்சன் தலைமையில் சீர்காழி  புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை  மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்காழி ஒன்றிய செயலாளர் கே.அசோ கன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.கேசவன், வி.ச. ஒன்றிய தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், ஒன்றிய செய லாளர் எஸ்.இளங்கோவன், வி.ச. மாவட்ட துணைத் தலைவர் கே. நாகையா உட்பட பலர் பங்கேற்றனர். இந்த மறியல் போராட்டத்தில் விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு  உறுப்பினர்கள், ஒன்றிய-நகர-கிளை  செயலாளர்கள், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு விவசாய  அமைப்புகள், அரசியல் கட்சியினர்  கலந்து கொண்டனர். போராட்டத்தில்  பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.