districts

img

பெரியார் மணியம்மை பல்கலை.யில் தேசிய அறிவியல் தின கண்காட்சி

தஞ்சாவூர், மார்ச் 2 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில், பிப்ரவரி 28 ஆம் நாளன்று, தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி, பதிவாளர் பேரா.பி.கே.ஸ்ரீவித்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இக்கண்காட்சியில் 80 அறிவியல் படைப்புகளும் காட்சிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இக்கண்காட்சியில் 272 மாணவர்கள் பங்குபெற்றனர். இணையவழியாக பென்சில் ஓவியம், தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகள் அறிவியல் யோசனை, அறிவியல் வினாடி-வினா போன்றவைகளில் 637 மாணவர்கள் பங்கு பெற்றனர். 129 கல்வி நிறுவனங்களிலிருந்து 736 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.சிவகுமார் சிறப்புரையாற்றினார். முனைவர் இர்ஃபானா பேகம், திட்ட அலுவலர் விஜயன் பிரசாத் (எடுசாட்) மற்றும் பேராசிரியர்கள் பேசினர்.