districts

ஜூன் 26 தஞ்சையில் மாரத்தான் ஓட்டம் பெரியார் மணியம்மை பல்கலை நடத்துகிறது

தஞ்சாவூர், ஜூன் 21 -  போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜூன் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாரத்தான் ஓட்டம் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் செ.வேலுசாமி, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் ஆகியோர் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதா வது: இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களி டம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இது சமூக அவலமாக மாறி வருகிறது. போதைப் பழக்கம் சமுதா யத்தில் கடுமையான விளைவுகளை ஏற்ப டுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, போதையில்லா சமூகத்தை உரு வாக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், போதை பொருள்  பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்த லுக்கு எதிரான சர்வதேச தினமான ஜூன் 26  ஆம் தேதி பெரியார் மணியம்மை நிகர்நிலைப்  பல்கலைக் கழகம் சார்பில், மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டி களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, மாரத்தான் போட்டியி லும் பங்கேற்கிறார். போட்டிகள் ஆண்கள், மாணவர்கள், பெண்கள் எனத் தனித்தனியாக நடைபெறு கிறது. 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு  20 கி.மீட்டரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர் களுக்கு 10 கி.மீட்டரும், பெண்களுக்கு 5  கி.மீட்டர் தூரமும் என போட்டிகள் நடை பெறுகின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்க  உள்ளார். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக  ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும்  ஆறுதல் பரிசு 5 பேருக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் உடனடியாக ரூ.300 செலுத்தி https://pmu.edu/dare2022 என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்  பெற விரும்புவோர் 9003976761 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினர்.