தஞ்சாவூர், டிச.24- டிசம்பர் 24 தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவு நாளை யொட்டி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் பெ.சண்முகம் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மனோகரன், பி.செந் தில்குமார், ஆர்.கலைச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். குருசாமி, என்.சரவணன், தஞ்சை மாநகரச் செயலாளர் எம்.வடிவே லன், மாநகரக் குழு உறுப்பினர் த.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். பேராவூரணியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. பாப நாசம் அடுத்த திருப்பாலைத் துறை யிலுள்ள பெரியாரின் சிலைக்கு தி.க சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மேலக் கோட்டை வாசல் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, மீன் வளர்ச்சி கழகத் தலை வர் என்.கௌதமன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தலைவர் உ.மதிவாணன், திராவி டர் கழக சார்பில் புபபேஷ் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமை யில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். ஜெயங்கொண்டம் நகர விசிக சார்பில் பெரியாரின் சிலைக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலை மையில் ஜெயங்கொண்டம் சட்ட மன்ற தொகுதி செயலாளர் இலக்கிய தாசன் மாலை அணிவித்தார்.