ஒரத்தநாடு, ஜன.24- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றி யம் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சியில் சீரமைக்கப் பட்ட நூலகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ந.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கர், நூல கக் கட்டடத்தை திறந்து வைத்தும், நன்கொடையா ளர்களுக்கு கதர் ஆடை அணிவித்தும் வாழ்த்திப் பேசினார். ஊராட்சி நூலகம் பழுது நீக்கம் செய்யப்பட்டு, கழிப் பறை வசதி, காற்றாடிகள், மின் விளக்குகள், சுற்றிலும் தளம் அமைத்து, வர்ணம் பூசி, மரக்கன்றுகள் நட்டு புதுப் பிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், கல்வியா ளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், போட்டித் தேர்வுக்கு படிப் போர் பயன்பெறும் வகை யில், அனைத்து தினசரி மற் றும் வார, மாத இதழ்களை நூலகத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.