தஞ்சாவூர், ஜன.23 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வடக்கு தென்னங்குடி என்ற இடத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான கயிறு தொழிற்சாலையை, பேராவூரணியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் கடந்த ஒரு ஆண்டாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வரு கிறார். அங்கு 11-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பொறி பறந்து விழுந்து தீ விபத்து ஏற்பட் டது. சற்று நேரத்தில் மளமளவென பரவிய தீ கட்டுக்கடங்காமல் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து பேராவூரணி மற்றும் பட்டுக் கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்வா ரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்த னர். தீ விபத்தில் அங்கு இருப்பு வைக்கப்பட்டி ருந்த கயிறு தயாரிக்கும் பஞ்சு மற்றும் கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்தது. சேத மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படு கிறது. பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் செல்வி, வட்டாட்சியர் சுகுமார் மற்றும் வரு வாய் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.